ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தில் திருப்பம்

Image result for பெண்ணிடம் நகை பறிப்பு தோழி உள்பட 6 பேர் கைது


தூத்துக்குடியில் பெண்ணிடம் 14 பவுன் நகைகளைப் பறித்ததாக, அப்பெண்ணின் தோழி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி ஜோதிபாசு தெருவைச் சேர்ந்த மாதவன் மனைவி லட்சுமி (34). இவர், தூத்துக்குடி குமாரதெருவில் கடந்த சனிக்கிழமை நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத இரு நபர்கள் தன்னிடம் இருந்த 23 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டதாகவும், அப்போது தனது இரு காதுகளிலும் காயம் ஏற்பட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால், சந்தேகமடைந்த போலீஸார் லட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த தனது தோழி அமலா வீட்டுக்கு வந்தபோது அங்கு வந்த சிலர் தன்னை தாக்கி 14 பவுன் நகைகளை பறித்துச் சென்றுவிட்டதாகவும், போலீஸாரை திசைதிருப்புவதற்காக அமலா தெரிவித்த ஆலோசனையின்படி அடையாளம் தெரியாத நபர்கள் நகையை பறித்துத் சென்றதாக கூறியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அமலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், தனது வீட்டில் உள்ள ஓர் அறையில் லட்சுமியை அமரச் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டதாகவும், பின்னர் சிலரை அனுப்பி அவரைத் தாக்கி, அவர் அணிந்திருந்த 14 பவுன் நகைகளை பறித்ததாகவும் போலீஸாரிடம் அமலா தெரிவித்தாராம். இந்த சம்பவம் தொடர்பாக அமலா, மரிய பிரான்சிஸ் (23), மார்ட்டின் (20),  மணிகண்டன் (19), கார்த்திக் (21), விக்னேஷ் (19) ஆகியோரை தென்பாகம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply