ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கோவில்பட்டி » சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு

Image result for சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடித் தவசு விழா ஜூலை 27ஆம் தேதி நாட்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 6ஆம் தேதி சுவாமி, அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஆடித் தவசு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், கணபதி பூஜை, ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, ருத்ரஜெபம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா கல்யாண முருகர், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. பூஜைகளை கணேச பட்டர், சுப்பிரமணிய அய்யர் ஆகியோர் செய்தனர். ஆடித் தவசுத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில், நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் மாரியம்மாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply