ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » கல்லூரி மாணவர்களிடையே மோதல்:பேருந்துகள் மீது கல்வீச்சு

Image result for மாணவர்கள் மோதல்:பேருந்துகள் மீது கல்வீச்சு


ஆவடி அருகே கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலின் காரணமாக, பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், கடந்த 10 நாள்களாக தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், செவ்வாய்பேட்டை, திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் இம்மாணவர்கள் புறநகர் ரயிலில் அடிக்கடி சண்டையிட்டு கொண்டதாகத் தெரிகிறது. கடந்த வாரம் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை போன்றவற்றைக் கொண்டு மோதிக் கொண்டனர்.
இதில் 12 மாணவர்களும், பொதுமக்கள் இருவரும் வெட்டுபட்டனர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை அண்ணா நகரில் பேருந்து பயணத்தின்போது தாக்கிக் கொண்டனராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை திருவல்லிக்கேணியிலிருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த தடம் எண் 27எச் பேருந்து, அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் வந்தபோது, அங்கு மறைந்திருந்த மாணவர்கள் பேருந்து மீது கல் வீசினார்கள்.
இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்து பேருந்து ஓட்டுநர் வாசு (52) உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, பயணிகள் வன்முறைக்கு பயந்து தப்பியோடினர்.
இதேபோல், தடம் எண் 20 பி பேருந்து மீதும் கல்லெறியப்பட்டது. இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த அம்பத்தூர் போலீஸார் சந்தேகத்தின்பேரில் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

0 comments

Leave a Reply