ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » இளைஞர் கொலையில் பெண் உள்பட மூவர் கைதுImage result for இளைஞர் கொலையில் பெண் உள்பட மூவர் கைது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு- பிச்சிவிளை மங்கம்மாள் சாலைப் பகுதியில் முள்புதருக்குள் இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை (ஆக. 3) கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் கதிரவன் (37), மேல திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுமித்ரா முன்னிலையில் போலீஸில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
அவர் அளித்த தகவலின் பேரில், அதே ஊரைச் சேர்ந்த அந்தோணி மகன் குமார் (எ) முத்துக்குமார் (26), கதிரவனின் சகோதரியான முருகன் மனைவி துளசி (45) ஆகிய இருவரையும் காவல் ஆய்வாளர் க.ஆடிவேல் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கைது செய்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
மங்கம்மாள் சாலைப் பகுதியில் கொலையுண்டு கிடந்தவர் அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த துரை (எ) அழகுதுரை (28). இவர், உறவினரான துளசி மகள் பேபி இலக்கியா (21) என்பவரை ஒரு தலையாக காதலித்தாராம். ஏற்கெனவே, அழகுதுரை மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளனவாம். இந்நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில் கைதான அவர், கடந்த 25 நாள்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
பின்னர், கடந்த 2ஆம் தேதி காலை அழகியபாண்டியபுரத்தில் உள்ள துளசியின் வீட்டுக்குச் சென்று பேபி இலக்கியாவை திருமணம் செய்துதருமாறு மிரட்டினாராம். இதில் தகராறு ஏற்படவே, சென்னையில் இருக்கும் தம்பி கதிரவனுக்கு துளசி தகவல் கொடுத்துள்ளார். உடனே, அன்றிரவே புறப்பட்டு ஊருக்கு வந்த கதிரவன், தனது நண்பர் குமார் (எ) முத்துக்குமாருடன் பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த அழகுதுரை தகராறில் ஈடுபட்டாராம். இதில், ஆத்திரமுற்ற கதிரவன், முத்துக்குமார் மற்றும் துளிசியுடன் சேர்ந்து, அழகுதுரையை கை, கால்களை கட்டி முத்துக்குமாரின் காரில் கொண்டுவந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு  தப்பியோடிய விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும், திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெ.கோபால், ஆய்வாளர் க.ஆடிவேல் தலைமயிலான காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

0 comments

Leave a Reply