ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்

Image result for ஆறுமுகனேரி புனித அன்னம்மாள் ஆலயம்


ஆறுமுகனேரி மேல சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நேர்ச்சை கொடிகளுடன் ஆலய வளாகத்தை மாலையில் பங்குமக்கள் வலம்வந்தனர். தொடர்ந்து, பங்குத் தந்தைகள் ஸ்டார்வின் அடிகளார், இருதயராஜ் அடிகளார் ஆகியோர் திருக்கொடியை ஏற்றி வைத்தனர்.
பின்னர் கொடியேற்று திருப்பலி, மாலை ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டு அன்னையிடம் பிரார்த்தனை செய்தனர்.
திருவிழா நாள்களில் தினமும் மாலை ஆராதனை நடைபெறும். 9ஆம் திருவிழாவான இம்மாதம் 13ஆம் தேதி மாலை திருவிழா மாலை ஆராதனையும், மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து புனித அன்னம்மாள் ஆலயத்துக்கு அன்னையின் சப்பர பவனியும் நடைபெறும். பின்னர், ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், ஆராதனையும் நடைபெறும். மறுநாள் 14ஆம் தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும்.  ஏற்பாடுகளை ஊர் கமிட்டி தலைவர் அமிர்தம் பர்னாந்து மற்றும் ஊர் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply