ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » ஜப்பானிய மூளைக் காய்ச்சல்

Image result for ஜப்பானிய மூளைக் காய்ச்சல்
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் காரணமாக ஊட்டச்சத்து குறைவாக உள்ள 32 ஆயிரம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது என, சமூகநலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்த விவரம்:
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸ் தொற்று நோயாகும். அத்துடன், ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு கடுமையான மூளைக் காய்ச்சல் ஏற்படும். இதற்காக, ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர், மதுரை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக, அந்த மாவட்டங்களில் 37 முதல் 60 மாதங்கள் நிரம்பிய குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 80 கிராம் அளவில் ரூ. 5.11 செலவில் ஊட்டச்சத்து மிகுந்த சத்துமாவை இணை உணவாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இணை உணவு ஆண்டுக்கு 300 நாள்கள் வழங்கப்படும். இதன் மூலம், அதிக, மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய 32 ஆயிரத்து 541 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply