ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு:

Image result for யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு


மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதிலும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, பின்னர் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. இதில் 2016-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று தேர்வெழுதினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. சென்னை மையத்தில் தேர்வெழுதிய சங்கர் என்ற தேர்வர் கூறியது:
தேர்வு எளிதாக இருந்தது என்றபோதும், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான கேள்விகள் கடந்த ஆண்டுகளைவிட கூடுதலாக இப்போது கேட்கப்பட்டிருந்தன என்றார்.

0 comments

Leave a Reply