ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » விபத்தில் இளைஞர் சாவு

போரூர் சுங்கச்சாவடி அருகே பரணிபுத்தூரில் சாலைத் தடுப்பை உடைத்து கால்வாயில் கவிழ்ந்து நின்ற பேருந்து.
அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் இறந்தார். மேலும், 10 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டு சென்ற அரசுப் பேருந்தில் 28 பயணிகள் இருந்தனர். மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே பரணிபுத்தூரிடம் செல்லும்போது, முன்னால் சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
இதைப் பார்த்த பேருந்தின் ஓட்டுநர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கண்ணனும் பிரேக் பிடித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வலதுபக்கமாக சாலைத் தடுப்பை உடைத்து சென்றது. அப்போது, சென்னையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போரூரைச் சேர்ந்த பாலமுருகன் (36) மீது மோதியது.
அதன் பின்னர் நிற்காத பேருந்து, அங்கிருந்த கால்வாயில் ஒரு பகுதி சரிந்து கவிழ்ந்து நின்றது. இதில், பலத்த காயமடைந்த பாலமுருகன், சிறிது நேரத்தில் இறந்தார். அதேவேளையில் கண்ணன், நடத்துநர் சீனிவாசன் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் கீழ்ப்பாக்கம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த பாலமுருகன் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

0 comments

Leave a Reply