ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆத்தூர் » நூறு நாள் வேலை கோரி ஆத்தூர் பேரூராட்சியில் மனு

Image result for நூறு நாள் வேலை
ஆத்தூர் பகுதியில் ஊரக வேலைஉறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி விவசாய தொழிற்சங்கத்தினர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆத்தூர் பேரூராட்சி பகுதிகளான கீரனூர், தலைவன்வடலி, ஆவரையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த சுமார் 500 பெண்கள் ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். அங்கு பேரூராட்சித் தலைவர் எம்.பி.முருகானந்தத்திடம், மக்கள் சார்பில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தேவாரம், மாவட்டச் செயலர் ரவி, மாவட்டப் பிரதிநிதி ரவி, பேரூராட்சி உறுப்பினர்கள் கிருபாகரன், ராஜகோபால் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

0 comments

Leave a Reply