ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஆலந்தலை » திருஇருதய அற்புதக்கெபி திருவிழா நிறைவு

Image result for திருஇருதய அற்புதக்கெபி திருவிழா


திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை திருஇருதய அற்புதக்கெபி பெருவிழா சிறப்பு திருப்பலியுடன் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.
இவ்வாலயத்தின் பெருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம்  திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 5.15 மணிக்கு மதுரை ரூபஸ் தலைமையில் முதல் திருப்பலியும், காலை 7 மணிக்கு மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன. திருப்பலியில் ஆயர் 60 சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கினார். காலை 10 மணிக்கு கூடுதாழை பங்குத்தந்தை ரஞ்ஜித்குமார் தலைமையில் ஆங்கில திருப்பலியும், முற்பகல் 11.30 மணிக்கு கன்னியாகுமரி பங்குத்தந்தை நசரேன் தலைமையில் வார வழிபாடு திருப்பலியும் நடைபெற்றன. இதில் மணவை மறைவட்ட முதன்மை குரு சகாயம், பங்குத்தந்தைகள் அந்தோணி ஜெகதீஷ் (அமலிநகர்), சில்வெஸ்டா, ராஜன், டெலிஸ் வாய்ஸ், ஜேம்ஸ் பீட்டர், ஜெயக்குமார், பால்ராஜ், ஆல்வின், அம்புரோஸ், சகேஷ், ஸ்டாவின், அலெக்ஸாண்டர் மற்றும் திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர்.
Image result for ஆலந்தலை
மாலை 4.30 மணிக்கு அமலிநகர் இறைமக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலி அதன் பங்குத் தந்தை தலைமையில் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு அலெக்ஸாண்டர் தலைமையில் திவ்ய நற்கருணை ஆசீரும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்றன. சனிக்கிழமை (ஆக.27) காலை 6.45 மணிக்கு மணப்பாடு பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் நன்றித் திருப்பலி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குத்தந்தை வில்சன், ஊர்நல கமிட்டியினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் செய்துவருகின்றனர்.

0 comments

Leave a Reply