ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

Image result for குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்


தூத்துக்குடி மாவட்டத்தில் 4.39 லட்சம் குழந்தைகளுக்கு புதன்கிழமை குடற்புழு நீக்க மாத்திரை விநியோகிக்கப்பட்டது.
எப்போதும்வென்றான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் கலந்துகொண்டு மாணவர், மாணவிகளுக்கு மாத்திரை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், இம்மாவட்டத்தில் உள்ள 1,583 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 119 தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவிகள் மற்றும் 1,477 அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு குடற்புழுவை தடுக்கும் அல்பென்டசோல் மாத்திரை வழங்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் புதன்கிழமை மாத்திரை உள்கொள்ளாத குழந்தைகளுக்கு ஆக.17 ஆம் தேதி மாத்திரை வழங்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் பி. பானு, துணை இயக்குநர்கள் மதுசூதனன், போஸ்கோ ராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயசூரியா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பாத்திமா, உதவி இயக்குநர் (ஊராட்சி) லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply