ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » அமலிநகர் அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Image result for திருச்செந்தூர்  அமலி மாதா
திருச்செந்தூர் அமலிநகர் தூய அமலி அன்னை ஆலய திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Image result for திருச்செந்தூர் அமலிநகர்
இதை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு கொடிபவனி முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தது. செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு திவ்ய நற்கருணை நாதர் எழுந்தோற்றத்தை தொடர்ந்து 6 மணிக்கு மறை மாவட்ட முதன்மைக் குரு கிருபாகரன் தலைமையில் சிறப்புத் திருப்பலியாகி, காலை 7.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் சகேஷ்சந்தியா, ஜெய்கர், சேவியர் ஆல்வின்,ஜேம்ஸ்பீட்டர் மற்றும் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.15 மணிக்கு அன்னையின் பவனி, ஜெபமாலை, நவநாள் ஜெபம், பிரார்த்தனையாகி,அதன்பின் நடந்த நற்கருணை ஆசீரில் பிரதீபன்லிப்போன்ஸ் மறையுரையாற்றினார். 9ஆம் திருவிழாவான செப். 7ஆம் தேதி காலை 6 மணிக்கு தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பங்குத்தந்தை அலாய்சியஸ் தலைமையில் திருயாத்திரை திருப்பலியும், மாலை 7.15 மணிக்கு பாளையங்கோட்டை ஜோமிக்ஸ் தலைமையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனியும் நடக்கிறது. 10ஆம் திருவிழாவான செப். 8ஆம் தேதி காலை 5.15 மணிக்கு பங்குத்தந்தை ஜெய்கர் தலைமையில் திருப்பலியும், 7 மணிக்கு வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தை ஆண்ட்ரூடீரோஸ் தலைமையில் திருவிழா சிறப்புப் பாடல் திருப்பலியில் சிறார்களுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜீவாநகர் பங்குத்தந்தை சகேஷ்சந்தியா தலைமையில் திருயாத்திரை திருப்பலியும் நடக்கிறது, 6.30 மணிக்கு மணவை மறை வட்ட அதிபர் சகாயம் தலைமையில் ஜெபமாலை, திவ்ய நற்கருணை நாதர் பவனி நடக்கிறது. தொடர்ந்து சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை தாமஸ்ரோசர் மறைவுரையாற்றுகிறார்.
ஏற்பாடுகளை அமலிநகர் பங்குத் தந்தை அந்தோனி ஜெகதீசன்,அருள்சகோதரிகள் மற்றும் ஊர்நலக் கமிட்டியினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply