ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகனேரி ஸ்ரீசுந்தரர் குரு பூஜை விழா நடைபெற்றது.

Image result for சுந்தரர் குருபூஜை


ஆறுமுகனேரி, ராஜபதி மற்றும் கட்டாரிமங்கலம் சிவன் கோயில்களில் ஸ்ரீசுந்தரர் குரு பூஜை விழா நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீசுந்தர் குரு பூஜையை முன்னிட்டு ஸ்ரீதிருஞான சம்பந்தர், ஸ்ரீதிருநாவுக்கரசர், ஸ்ரீசுந்தரர் மற்றும் ஸ்ரீமாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீசுந்தரரை தரிசனம் செய்தனர்.
இதே போன்று நவ கைலாய  ஸ்தலங்களில் கேது வணங்கிய ஸ்தலமான ராஜபதி ஸ்ரீசெளந்திரநாயகி அம்மன் சமேத ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலிலும் ஸ்ரீசுந்தரர் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீசுந்தரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சாத்தான்குளம்:சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகிய கூத்தர் கோயிலில் ஆடிமாதம் சுவாதியையொட்டி ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குருபூஜை  நடைபெற்றது.  
இதையொட்டி கோயிலில் காலை கணபதி ஹோமம், விக்னேஸ்வரஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளி  வீதியுலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேவாரம் பாடினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply