ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் விவரம் வெளியீடுImage result for அங்கீகாரமுள்ள செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் விவரம் வெளியீடு
தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 தமிழகத்தில் நர்சிங் பள்ளி மற்றும் நர்சிங் கல்லூரிகள் நடத்த தமிழக அரசின் அனுமதி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சில் அனுமதி ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.  ஆனால், அப்படி அனுமதி பெறாமல் பல மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழக பயிற்சி மையங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும், விதவிதமான பெயர்களில் நர்சிங் படிப்புகளை நடத்தி வருவதால் அவற்றில் சேர்ந்து மாணவ, மாணவியர் ஏமாற வேண்டாம்.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை கீழ்காணும் நிறுவனங்களே அரசு அங்கீகாரம் பெற்றவை ஆகும்.
இதன்படி, தூத்துக்குடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புனித ஆன்ஸ் நர்சிங் பள்ளி மற்றும் புனித ஆன்ஸ் நர்சிங் கல்லூரி, ஏவிஎம் நர்சிங் பள்ளி, எஸ்ஏஹெச் நர்சிங் பள்ளி, கோவில்பட்டியில் பரிமளா நர்சிங் பள்ளி, நாசரேத்தில் சிஎஸ்ஐ புனித லூக்கா நர்சிங் கல்லூரி, திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி ஆகியவை அங்கீகாரமுள்ளவை. இவற்றில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தவிர அனைத்து நிறுவனங்களிலும் தலா 20 பேருக்கு மட்டும் சேர்க்கை அனுமதி உள்ளது.
இதுதவிர, வேறு செவிலியர் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய தகுதியானவை அல்ல; அங்கீகரிக்கப்பட்ட செவிலியராகவும் பணிபுரிய இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply