ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற சிறப்பு முகாம்

Image result for மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற சிறப்பு முகாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 27) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு ஊனத்தின் நிலை 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித்தொகை வழங்கிட   மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஆக.27) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
அனைத்து வட்டங்களிலும் உள்ள 18 வயதுக்குள் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனம் உள்ள அரசு மற்றும் தனியார் மூலம் வேலையில்லாத மற்றும் மாவட்ட  மறுவாழ்வு அலுவலகம் மற்றும்  சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் ஏற்கெனவே மாதாந்திர உதவித்தொகை பெற்றிடாத மாற்றுத் திறனாளிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply