ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » கொன்று புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுப்புImage result for கொன்று புதைக்கப்பட்ட குழந்தை
தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீஸார் வெள்ளிக்கிழமை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சித்ரா. லட்சுமணன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இத்தம்பதியின் குழந்தை ஷியாம் ரக்ஷன் (3).
சித்ராவுக்கும், தூத்துக்குடி ராஜகோபால்நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அய்யாத்துரைக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் குழந்தை ஷியாம் ரக்ஷனுடன் சித்ரா மாயமானார். இதுகுறித்து லட்சுமணனின் தந்தை தங்கவேல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி அண்ணாநகரில் கார் ஓட்டுநர் அய்யாத்துரையுடன் சித்ரா வசித்து வந்தது தெரியவந்தது. மேலும், குழந்தை ஷியாம் ரக்ஷனை கொன்று புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சித்ராவை போலீஸார் கைது செய்தனர். அய்யாத்துரை தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, தலைமறைவாக இருந்த அய்யாத்துரை, சிப்காட் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், கொலை செய்யப்பட்ட குழந்தை ஷியாம் ரக்ஷனின் உடல் தூத்துக்குடி மையவாடியில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. அந்த இடத்துக்கு அய்யாத்துரையை போலீஸார் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனர்.
தூத்துக்குடி வட்டாட்சியர் சங்கரநாராயணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், மையவாடியில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் மருத்துவக் குழுவினர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அய்யாத்துரையிடம் சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply