ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா

Image result for திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.
இத் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்தாண்டு ஆவணித் திருவிழா  திங்கள்கிழமை (ஆக.22) அதிகாலை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை, 12ஆம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டமானது 1ஆம் படி, படி செப்பு ஸ்தலத்தார் சு.சரவணன் ஐயர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தது.
நிகழ்ச்சியில், திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், உள்துறை மேலாளர் அய்யாப்பிள்ளை, மணியம் மது உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின் முறையினர் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கொடியேற்றம்:  இத்திருக்கோயிலில் ஆவணித் திருவிழா (இன்று)  திங்கட்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு திருக்கோயில் செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. மாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்து திருக்கோயில் வந்து சேர்கிறார். இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.
ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும்  திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

0 comments

Leave a Reply