ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

Image result for தூத்துக்குடி  வருவாய்த் துறை அலுவலர்கள்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் புதன்கிழமை மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி சார்-ஆட்சியர் எஸ். கோபால சுந்தரராஜை கண்டித்தும், வருவாய்த் துறை அலுவலர்கள் மீது விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறியும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாலை வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செந்தூர்ராஜன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து, வருவாய் அலுவலர் சங்க மாவட்டச் செயலர் செந்தூர்ராஜன் கூறுகையில், தூத்துக்குடி சார் ஆட்சியர் வருவாய்த் துறை அலுவலர்கள் மீது மேற்கொள்ளும் விரோதப் போக்கை கண்டித்து கடந்த 1 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
ஆட்சியருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டோம். இருப்பினும், தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. எனவே, சார்-ஆட்சியர் கோபால சுந்தரராஜை பணியிட மாற்றம் செய்யும் வரை மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை (ஆக. 4) ஒரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார் அவர்.

0 comments

Leave a Reply