ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தல்: அறிவியல் கண்காட்சியில் விளக்கம்

அறிவியல் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிடும் மாணவர்கள்.
சென்னை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வது குறித்த விளக்கத்தை மாணவர்கள் அளித்தனர்.
"சென்னையை பொலிவுறு நகரமாக்க என்ன செய்ய வேண்டும்' என்ற தலைப்பில் மாணவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் "யுனைடெட் வே' சென்னை நிறுவனம், சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து அறிவியல் கண்காட்சியை புதன்கிழமை நடத்தின.
இந்தக் கண்காட்சியை "யுனைடெட் வே' சென்னை நிறுவனத்தின் செயல் இயக்குநர் சியாமளா, பல்கலை. நிர்வாக இயக்குநர் மரியஜீனா ஜான்சன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில், சென்னை பகுதியைச் சேர்ந்த 103 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
இதில், சுற்றுப்புறச்சூழல், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி-மின்சார சிக்கனம், அடிப்படை கட்டமைப்பு, சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இதில், முதல் பரிசு தியாகராய நகரைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ண பள்ளியின் 5 மாணவர்கள் குழுவுக்கும், 2-ஆம் இடம் பரிசாக அடையாறு பாரத் சீனியர் மேல்நிலைப் பள்ளியின் 5 பேர், மாடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 5 பேர் என 2 குழுக்களும்,
3-ஆம் பரிசாக சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சென்னை (மாநகராட்சி) பள்ளியின் 5 பேர், டிஎல்எஃப் கார்டன் சிட்டி பி.எஸ்.பி.பி. மில்லினியம் மேல்நிலைப் பள்ளியின் 5 பேர் என 2 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டன. இதில், பரிசு பெற்ற 25 பேருக்கும் மதிவண்டிகள் வழங்கப்பட்டன.

0 comments

Leave a Reply