ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » இன்று அம்மா திட்ட முகாம்



Image result for இன்று அம்மா திட்ட முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.19) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஆக.19) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் தளவாய்புரம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கீழ்ப்பிடாகை அப்பன்கோவில் கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் கந்தசாமிபுரம் கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் கோமானேரி கிராமத்திலும் முகாம் நடைபெறுகிறது.
இதேபோல,  கோவில்பட்டி வட்டத்தில் தெற்கு இலந்தைக்குளம் கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் பட்டிதேவன்பட்டி கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் வேலிடுபட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் சாமிநத்தம் கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இம்முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்புச் சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் அம்மா திட்ட சிறப்பு முகாமில் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply