ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » இன்று விவேகானந்தர் சதுக்கம் திறப்புImage result for இன்று விவேகானந்தர் சதுக்கம் திறப்பு
தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட விவேகானந்தர் சதுக்க திறப்பு விழா புதன்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.
விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவாலயம் ஆகியவை சார்பில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் கல் சிற்பத்தில் விவேகானந்தர் திருவுருவச் சிலை அமைந்த விவேகானந்தர் சதுக்கம் திறப்பு விழா புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவாலய உதவித் தலைவர் நிவேதிதா பிடே தலைமை வகிக்கிறார். சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் விவேகானந்தர் சதுக்கத்தை திறந்துவைக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா விவேகானந்தர் குறித்த புத்தகத்தை வெளியிடுகிறார்.  தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் சு. நடராஜன் கல்வெட்டை திறந்துவைக்கிறார்.  விவேகானந்த கேந்திர அகில இந்திய பொதுச்செயலர் பானு தாஸ், பொருளாளர் ஹனுமந்தராவ், விவேகவாணி கேந்திர மாத இதழ் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

0 comments

Leave a Reply