ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » காயல்பட்டினத்தில் மருத்துவ ஆலோசனைக் கூட்டம்

Image result for காயல்பட்டினத்தில் மருத்துவ ஆலோசனைக் கூட்டம்


காயல்பட்டினம் அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளை அரசு-பொதுமக்கள் இணைந்து நிறைவேற்றுவது குறித்து ஆலோசிப்பதற்காக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனைக்கான தேவைகள் குறித்து தலைமை மருத்துவர் ராணி பேசினார்.
இச்சங்கத்துக்கு, கோட்டாட்சியர் தலைவராகவும்,   தலைமை மருத்துவர் செயலராகவும், நகராட்சி ஆணையர், அரசு மருத்துவமனையை உள்ளடக்கிய பகுதிகளைச் சேர்ந்த 2 நகர்மன்ற உறுப்பினர்கள் அதன் உறுப்பினர்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன் நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply