ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகனேரியில் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா

Image result for ஆறுமுகனேரியில் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா
ஆறுமுகனேரி மேல சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழாவையொட்டி திருவுருவ சப்பர பவனி நடைபெற்றது.
இந்த ஆலய திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் மாலையில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை நடைபெற்றது. 9ஆம் திருவிழாவான 13ஆம் தேதி மாலையில் ஆராதனையும், மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து புனித அன்னம்மாள் திரு உருவ சப்பர பவனி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தது. அங்கு மாலை ஆடம்பர கூட்டு ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து புனித அன்னம்மாள் சப்பரம் புறப்பட்டு புனித சவேரியார் ஆலயம் வந்தடைந்தது.
Image result for திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி
ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை ஒத்தக்கடை குருமாணவர் பயிற்சியாளர் இருதயராஜ் தலைமை வகித்தார். பங்குத்தந்தை டார்வின் அடிகளார் மற்றும் துணை பங்குத்தந்தை இருதயராஜ் ஆகியோர் திருப்பலி நடத்தினர்.
Image result for நற்கருணை பவனி

மாலை புனித சவேரியார் ஆலயத்தில் நற்கருணை பவனி, மாலை கூட்டு ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply