ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் அருகே இளைஞர் கொலை

Image result for திருச்செந்தூரில் இளைஞர் கொலை
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறு - பிச்சிவிளை பகுதியில் இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழநாலுமூலைக்கிணறு - பிச்சிவிளை செல்லும் மங்கம்மாள்சாலை அருகே முள்புதர்கள் நிறைந்த பகுதியில் புதன்கிழமை இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வெ.கோபால், காவல் ஆய்வாளர் க.ஆடிவேல், உதவி ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் சடலத்தை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணையில் இறந்து கிடந்த இளைஞர் வீரபாண்டியன்பட்டணத்தில் சலூன் கடை நடத்தி வரும் ரவி என்பவரது மகன் அழகுதுரை (28) என்பது தெரியவந்தது. இவர் சில நாள்களுக்கு முன்பு தான் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு, வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply