ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» கயத்தாறு » கயத்தாறு அருகே லாரி - சுமை ஆட்டோ மோதல்



Image result for லாரி - சுமை ஆட்டோ மோதல்
கயத்தாறு அருகே லாரியின் பின்பகுதியில் சுமை ஆட்டோ மோதியதில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விளாத்திகுளத்தையடுத்த கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மாரியப்பன் (39). சுமை ஆட்டோ ஓட்டுநரான இவர் ஓட்டி வந்த சுமை ஆட்டோ, அம்பாசமுத்திரத்திலிருந்து மதுரைக்கு வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.  திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த கரிசல்குளம் விலக்கு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் சுமை ஆட்டோ மோதியது. இதில் ஓட்டுநர் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிலிருந்த அதே ஊரைச் சேர்ந்த ஜெயபால் மகன் வேலு என்ற வேல்ராஜன் (24) மற்றும் பொன்னையா ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற கயத்தாறு போலீஸார் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து,  லாரி ஓட்டுநரான தூத்துக்குடி பாண்டியாபுரத்தைச் சேர்ந்த காசிசாமி மகன் செல்லையாவிடம் (40) விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments

Leave a Reply