ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் "வெள்ளை யானை' வீதியுலாImage result for திருச்செந்தூரில் "வெள்ளை யானை' வீதியுலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதியுலா நடைபெற்றது.
ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
மாலையில், கோயில் யானையின் உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோயிலிலிருந்து புறப்பட்டு சன்னதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரதவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோயில் சேர்ந்தனர். தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன் சேரமாள்பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

0 comments

Leave a Reply