ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

Image result for தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு


தூத்துக்குடி அருகே படகு இயந்திரம் பழுதானதால் நடுக்கடலில் இரண்டு நாள்களாக தத்தளித்த 7 மீனவர்களை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் திங்கள்கிழமை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த அருள்நாதன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த அண்டோ, முகமது அனிபா, பிராங்கோ, தொம்மை, ராஜ் உள்பட 7 பேர் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை கடலுக்குச் சென்றனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து தென்கிழக்கே 11 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு இயந்திரம் திடீரென பழுதானது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக அவர்கள் 7 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.
படகு இயந்திரம் பழுது தொடர்பாக, சக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தூத்துக்குடி தருவைக்குளத்தில் உள்ள கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், தங்களது மீட்புப் படகில் சென்று மீனவர்கள் 7 பேரையும் பத்திரமாக மீட்டனர். பழுதான படகையும் மீட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், படகை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

0 comments

Leave a Reply