ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » ரயிலில் தவறவிட்ட பணத்தை அதிகாரிகள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Image result for ரயிலில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அதிகாரிகள்


விரைவு ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம் மற்றும் ஆவணங்களை ரயில்வே அதிகாரிகள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் என்.ரவிச்சந்திரன். அவர் கடந்த ஜூலை 22-ஆம் தேதி, ஹெளரா விரைவு ரயிலில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் ரயிலில் ரூ.5,300 ரொக்கம், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, காரின் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை தவற விட்டுச் சென்றுள்ளார்.
இதைக் கண்ட ரயில் பெட்டி உதவியாளர் நவீன்குமார், நடைமேடை ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் அவற்றை மீட்டு, ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு தவறவிட்டத்தை திரும்ப ஒப்படைத்தனர்.
பர்ஸ் ஒப்படைப்பு:
இதேபோன்று சேலத்தைச் சேர்ந்த சுரேஷ் ராவ் என்பவர் எர்ணாகுளத்திலிருந்து சேலத்துக்கு திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சேலத்தில் தன்னுடைய பர்ûஸ தவறவிட்டுள்ளார். அந்தப் பர்ஸில் கிடைத்த தகவலை வைத்து ரயில் பயணச் சீட்டு பரிசோதகர் பாலாஜி, சென்னையில் உள்ள சுரேஷ் ராவின் மருமகன் விஷ்ணு பிரசாதைத் தொடர்பு கொண்டு தவறவிட்ட பர்ûஸ ஒப்படைத்தார்.
பயணிகள் தவறவிட்டதை உரிய நேரத்தில் ஒப்படைத்த ரயில் ஊழியர்களை, தெற்கு ரயில்வே தலைமை வர்த்தக மேலாளர் அஜீத் சக்சேனா நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

0 comments

Leave a Reply