ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ஆடித் தேரோட்டம்

Image result for அய்யா வைகுண்டர்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், தொட்டில் வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனத்தில் எழுந்தருளினார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11 ஆம் திருநாளான திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையை தொடர்ந்து, புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் பிற்பகல் 1.45 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து அன்னதர்மமும், மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அய்யாவழி அருள் இசை பாடகர் சிவச்சந்திரன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபைத் தலைவர் பி.சுந்தரபாண்டி, செயலர் எஸ்.தர்மர், கெளரவத் தலைவர் எஸ்.நடேசன், பொருளாளர் ஏ.ராமையா உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply