ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » 5-ஆவது மாடியில் இருந்து பெண் குதித்து தற்கொலை

Image result for மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை அப்பா கார்டன் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் வசிக்கும் இரும்பு வியாபாரி விக்கி அகர்வால். இவரது மனைவி சுனிதா அகர்வால் (41). ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், சுனிதா வியாழக்கிழமை பால்கனிப் பகுதிக்கு வந்து, ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவர், சிறிது நேரத்தில் இறந்தார்.
தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், வேதனையில் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

0 comments

Leave a Reply