ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » வேனைக் கடத்தி ரூ.26 லட்சம் கொள்ளை:

Image result for வேனைக் கடத்தி ரூ.26 லட்சம் கொள்ளை:
சென்னை பாரிமுனையில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுத்து வந்த வேனைக் கடத்தி ரூ.26 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஓட்டுநர் உள்பட இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அயனாவரத்தில் இயங்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனம், ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் கு.கஸ்டோடியன் ஆனந்தன் (28), காவலாளி சுரேந்தர்குமார் சிங், ஓட்டுநர் நாராயணன் (62) ஆகியோர் ஒரு வேனில் வடசென்னைப் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் செவ்வாய்க்கிழமை பணம் நிரப்புவதற்காக ரூ.1.63 கோடி பணத்துடன் சென்றனர்.
பாரிமுனை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணத்தை நிரப்ப, ஆனந்தனும், சுரேந்தரும் அங்கு சென்றனர். அப்போது அந்த வேனில், ஓட்டுநர் நாராயணன் மட்டும் இருந்தாராம். அப்போது நாராயணன் செல்லிடப்பேசிக்கு, ஒரு அழைப்பு வந்ததாம். அதிஸ் பேசிய நபர், தான் ஆனந்தன் பேசுவதாகவும், அங்கப்பன் தெரு ஏ.டி.எம். மையத்துக்கு உடனே வரும்படி கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.
உடனே நாராயணன், வேனை விட்டு இறங்கி ஏ.டி.எம். மையத்துக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆனந்தன், தான் அழைக்கவில்லை என நாராயணனிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே வேனை நோக்கி ஓடி வந்துள்ளார். அப்போது வேன் பணத்துடன் கடத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை முழுவதும் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் டுபட்டனர். இதற்கிடையே, கடத்தப்பட்ட வேன், ராயபுரம் பனைமரத் தொட்டி அருகே நிற்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீஸார் வேனை சோதனையிட்டபோது, வேனில் வைக்கப்பட்டிருந்த பணத்தில் ரூ. 26 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வேனில் வந்த காவலாளி சுரேந்தர், ஓட்டுநர் நாராயணன் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த வேனின் மற்றொரு ஓட்டுநர் பா.ராஜேஷ் (24) சந்தேகப்படும் வகையில், நாராயணனிடம் இரு முறை செல்லிடப்பேசியில் பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், தலைமறைவாக இருந்த ராஜேஷை கோயம்பேடு அருகே புதன்கிழமை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், அதில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.26 லட்சம் இருப்பது தெரியவந்தது.
திருமண செலவுக்காக: பணத்தை கொள்ளையடிப்பதற்காக ராஜேஷ், அந்த வேனின் கதவுகளை திறக்க போலி சாவிகளைத் தயாரித்துள்ளார். சம்பவத்தன்று, வேன் நிற்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக செல்லிடப்பேசி மூலம் ஓட்டுநரை ராஜேஷ் தொடர்பு கொண்டுள்ளார்.
சம்பவ இடத்தில் வேன் நிறுத்தப்பட்டதும், நாராயணனின் கவனத்தை திசை திருப்பி, தன்னிடமிருந்த போலி சாவி மூலம் வேனின் கதவை திறந்த ராஜேஷ், அதனை கடத்தி சென்றுள்ளார்.
விரைவில் தமக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், திருமண செலவுக்காகவே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதில் ராஜேஷுக்கு உதவிய, அவரது உறவினரான வியாசர்பாடியைச் சேர்ந்த கோ.லிங்கம் (24) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

0 comments

Leave a Reply