ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடியில் ரூ. 1.87 கோடியில் சாலைப் பணிகள்

Image result for தூத்துக்குடியில் சாலைப் பணிகள்


தூத்துக்குடியில் ரூ. 1.87 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தார்ச் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக 15 மற்றும் 25 ஆகிய வார்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.87 கோடி மதிப்பீட்டில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் ஒருபகுதியாக இரண்டாம் ரயில்வே கேட் அருகே உள்ள ஆண்டாள் தெரு, வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, எஸ்.எஸ். தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் திங்கள்கிழமை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமாக அமைத்து விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆய்வின் போது மாநகராட்சி இளநிலை உதவி ஆய்வாளர் பாண்டி, பணி ஆய்வாளர் மூர்த்தி, மேயரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 comments

Leave a Reply