ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » வஉசி துறைமுகத்தில் ரூ.1531 கோடியில் புதிய திட்டங்கள்Image result for தூத்துக்குடி வஉசி துறைமுகம்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.1531 கோடியில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக, துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்த சந்திரபோஸ்  தெரிவித்தார்.
வஉசி துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்த சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்பு படை, துறைமுகப் பள்ளியின் தேசிய மாணவ, மாணவிகள் படை, துறைமுகப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கடற்சார் பயிற்சி மைய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசியது: வஉசி துறைமுகம் நிகழ் நிதியாண்டில் 13.70 சதவீதம் வளர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர்கள், துறைமுக ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கும் நன்றி.
நிகழ் நிதியாண்டில் (2016-17) பொதுவான சரக்குகளை கையாளுவதற்கு குறைந்த ஆழமுள்ள தளம், நிலக்கரியை கையாளுவதற்கு வடக்கு சரக்குத் தளம்-3, சரக்குப் பெட்டகங்களைக்  கையாளுவதற்கு வடக்கு சரக்குத் தளம்-4, சூரியஒளி மின்சார  செயல்பாட்டுத் திட்டம், வாகன முனையம் கட்டமைப்பு, நிலக்கரி தளம்-1 மற்றும் 2 நவீனமயமாக்கல், கட்டடப் பொருள்கள் கையாளுவதற்கான குறைந்த ஆழமுள்ள தளங்கள் மற்றும் நகரும் பளுதூக்கிகள் தளம் 3 மற்றும் 4இல் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்களின் மொத்தம் செலவீனம் ரூ.1531.31 கோடி ஆகும். இந்த செயல்திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் வஉசி துறைமுகத்துக்கு சரக்குகளின் கையாளும் கொள்ளளவு 44 மில்லியன் டன்களாக மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.
தொடர்ந்து, துறைமுக மாத இதழான "பியர்ல் டைஜஸ்ட்' முதல் பிரதியை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் வெளியிட, அதனை துணைத் தலைவர் சு. நடராஜன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர், மாணவிகள்,  மிகச் சிறப்பாக பணிபுரிந்த துறைமுக ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பரிசு வழங்கி கெüரவிக்கப்பட்டது.

0 comments

Leave a Reply