ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » ஆகஸ்ட் 15 இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

Image result for மதுக்கடைகளுக்கு விடுமுறை


சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் இயங்கிவரும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியர்(பொறுப்பு) அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மதுபானம் உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளும், சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்.
இதையும் மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a Reply