ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » லாரி கிளீனர் அடித்துக் கொலை

Image result for லாரி கிளீனர் அடித்துக் கொலை
தூத்துக்குடியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் லாரி கிளீனர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகேயுள்ள கீழசெய்தலை கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் வீரமணி (32). திருமணமான சில மாதங்களில் மனைவியை பிரிந்த இவர், தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள லாரி போக்குவரத்து நிறுவனத்தில் கிளீனராக வேலை பார்த்து வந்தார்.
தினமும் வேலை முடிந்ததும் வீரமணி ஊருக்குச் செல்லாமல் அங்குள்ள லாரி போக்குவரத்து நிறுவனங்களிலேயே இரவு தங்கிவிடுவாராம்.
இந்நிலையில், மற்றொரு லாரி போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் தன் நண்பரான வசந்தகுமாருடன் இணைந்து வீரமணி ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தினாராம். இந்நிலையில், வீரமணி தலையில் தாக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை காலை சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
சிப்காட் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, வீரமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றும், வீரமணியுடன் சேர்ந்து மது அருந்திய வசந்தகுமார் பிடிபட்டபிறகுதான் முழு விவரம் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

0 comments

Leave a Reply