ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » கொலை வழக்கில் இரு இளைஞர்கள் திருச்செந்தூரில் கைது

Image result for கொலை வழக்கில் இளைஞர்கள் கைது
திருச்செந்தூரில் இளைஞர் கொலை வழக்கில், அவரது உறவினர்கள் 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்செந்தூர் மாவீரன்நகரை சேர்ந்தவர் வென்னிமுத்து (45), இவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் கருப்பசாமி (22). இவர், ஆறுமுகனேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் இவர் அங்குள்ள காட்டுப் பகுதியில்  உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். திருச்செந்தூர் தாலுகா போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் வி.ஏ.ஓ. முருகப்பெருமாளிடம் கருப்பசாமியை கொலை செய்ததாக திருச்செந்தூர் மாவீரன் நகரைச் சேர்ந்த கணபதி மகன் கனகராஜ் (23) மற்றும் முருகன் மகன் விஜயகுமார் (25) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.  இதில், மூவரும் உறவினர்கள் என்பதும், முன்விரோதம் காரணமாக கருப்பசாமியை மற்ற இருவரும் சேர்ந்து கடந்த 14ஆம் தேதி மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக் கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் நீதிபதி முன்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 comments

Leave a Reply