ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் கோல்டன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Image result for கோல்டன் ரோட்டரி சங்க நிர்வாகம்


திருச்செந்தூரில் கோல்டன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் வி.எம்.செந்தில்குமார் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் இறைவணக்கம் பாடினார். செயலர் எம்.கணேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். புதிய தலைவராக தேர்வான ஆர்.கோடீஸ்வரனுக்கு, மாவட்ட ஆளுநர் கே.விஜயகுமார் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். திருச்செந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் மு.சுரேஷ்பாபு, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கண்ணன் சிறப்புரையாற்றினர். ரோட்டரி சங்க மாத இதழை சின்னத்துரை அப்துல்லா வெளியிட, ஹெச்.ஷாஜகான் பெற்றுக்கொண்டார்.
மேலும், 44 புதிய உறுப்பினர்கள் பதவியில் அமர்த்தப்பட்டதுடன், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ரோட்டரி சங்கமும் தொடங்கப்பட்டது.
இதுதவிர, கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி, அரசுத்தேர்வில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவ- மாணவியருக்கு பரிசுகள் என பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய பெரியோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ரோட்டரி உறுப்பினர் எ.செல்வின், அருள் திலகவதி தொகுத்து வழங்கினர். ரோட்டரி சங்கச் செயலர் டி.ஆறுமுகம் நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply