ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» ஸ்ரீவைகுண்டம் » ஸ்ரீவைகுண்டம் மற்றும் மருதூர் அணைகள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Image result for ஸ்ரீவைகுண்டம் மற்றும் மருதூர் அணைகள் தூர்வாரும் பணிகளை
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவைகுண்டம் மற்றும் மருதூர் அணைகள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நிகழாண்டில் ஜூலை மாதம் 31- ஆம் தேதி வரையிலான இயல்பான மழை அளவு 189 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், 19 ஆம் தேதி வரை 47.53 மி.மீ மழையே பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 141.47 மில்லி மீட்டருக்கும் குறைவான மழை அளவாகும்.
பாபநாசம் நீர்தேக்கத்தில் 70.13 அடி அளவும், சேர்வலாறு நீர்தேக்கத்தில் 87.79 அடியும் நீர் இருப்பு உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் கீழ் உள்ள தெற்கு பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய் ஆகிய கால்வாய்களின் மூலம் பயன்பெறும் 8124 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பழந்தொழி சாகுபடிக்கு 1.4.2016 முதல் 31.05.2016 வரை 61 நாள்களுக்கு நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு பொறுத்து 1354 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் அரசு அனுமதிப்பட்ட புறம்போக்கு குளங்களில் இருந்து சாதாரண மணல், வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் உள்ளிட்ட அனைத்து வகையான மண்களும் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தூர்வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள், கால்வாய் ஆக்கிரமித்தல் போன்ற அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்த புகார்களின் அடிப்படையில் அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து இடுபொருள்கள், விதைகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருள்களும் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.  போலி உரங்கள் குறித்து உரக்கடைகளிலும்,  பூச்சிகொல்லி மருந்துக்கடைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று பயன் அடைய வேண்டும் என்றார் அவர்.

0 comments

Leave a Reply