ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கைது

Image result for பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்
பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
பட்டாபிராம் சி.டி.எச். சாலையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் தமிழ்நாடு சுதேசி பெண்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாக உள்ளார். இவர் கடந்த 18-ஆம் தேதி சென்னை மாநகர காவல்
ஆணையர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தார். அதில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கு குறித்துப் பேசிய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
தொல்.திருமாவளவன், ஜாதி, மத மோதலைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.
அவரைக் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்ச்செல்வியின் செல்லிடப்பேசிக்கு, மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், வழக்குப் பதிந்த போலீஸார், விசாரனை நடத்தினர். இதில் மிரட்டல் விடுத்தவர் அரியலூர் மாவட்டம், குலுமூரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற
மணிமொழியன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிமொழியனை போலீஸார் கைது செய்தனர்.

0 comments

Leave a Reply