ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » விசைப்படகு மீனவர்கள் கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி கோரி வேலை நிறுத்தம்

Image result for கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி கோரி வேலை நிறுத்தம்
தூத்துக்குடி, :தூத்துக்குடியில் கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி கோரி விசைப்படகு மீனவர்கள் 
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 260 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. 
தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளில் கடலில் 
மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 வரை மட்டுமே அனுமதி உண்டு 
இந்த நேரத்திற்குள் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்திற்குள் வந்து விட வேண்டும். 
இந் நிலையில் இரவு மீனவர்கள் கரை திரும்பி விடுகின்றனர். இதன் பிறகு வரும் கேரள 
பகுதி மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலில் தங்கி மீன் பிடிப்பதால், தூத்துக்குடி பகுதியில் உள்ள மீன்களை பிடித்து சென்றுவிடுகின்றனர். பகலில் கடலுக்கு 
செல்லும் தூத்துக்குடி மீனவர்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைப்பதில்லை. கடலில் 
மீன்கள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் போது நஷ்டத்தை சந்திக்கின்றனர். 
இதன் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி கோரி 
காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 260 விசைப்படகுகள் 
கடலுக்கு செல்லவில்லை. 2,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் 
பங்கேற்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் 
நடத்தப்போவதாக தெரிவித்தனர். 

0 comments

Leave a Reply