ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகநேரி பாரதிநகர் சேர்ந்த தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

Image result for தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
ஆறுமுகநேரி பாரதிநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சித்தி விநாயகம் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் தெருக் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் சந்திரசேகர் மகன் பிரபு என்பவர் தன் தாயாருடன் தகரறு செய்து விட்டு, அரிவாளுடன் வெளியே ஓடி வந்தார். இதனை சித்தி விநாயகம் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு அரிவாளால் சித்தி விநாயகத்தின் தோள்பட்டை, கையில் வெட்டினார். படுகாயம் அடைந்த சித்தி விநாயகம் சிகிச்சைக்காக் காயல்பட்டிணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply