ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » சென்னை மாணவர்களுக்குள் மோதல் ஒருவரது கழுத்து அறுக்கப்பட்டது

Image result for சென்னை மாணவர்களுக்குள் மோதல்
மாணவர்கள் மோதிக் கொண்டதில், ஒருவரது கழுத்து அறுக்கப்பட்டது.
கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது.
இதில், மாணவரின் கழுத்து அறுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, 2 மாணவர்களைக் கைது செய்தனர்.
3 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு: இதேபோல், கோயம்பேட்டில் இருந்து எம்.கே.பி.நகர் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு வந்தது. அண்ணா நகர் ரவுண்டானா அருகே செல்லும்போது, கல்லூரி மாணவர்கள் சிலர் கற்களை வீசினர்.
இதில், பேருந்தின் முன் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படிக்கும் கண்ணனை கைது செய்தனர்.
மேலும், சேத்துப்பட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கும், நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், பேருந்தின் கண்ணாடி உடைத்துவிட்டு மாணவர்கள் தப்பியோடினர்.
இதேபோல், அமைந்தகரையில் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கற்களை வீசி தாக்கி உடைத்தனர்.

0 comments

Leave a Reply