ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » ஸ்ரீ சபாபதி விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை அன்று திருச்செந்தூரில் நடைபெற்றது.

Image result for விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
இவ்விழாவையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, கணபதி ஹோமம், தாராபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கும்ப பூஜையும், முற்பகல் 11.45 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனையும், நண்பகல் 12 மணிக்கு விமான கலசத்துக்கு அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. முன்னதாக சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்து வீதி வலம் வந்தனர். பிற்பகலில் அன்னதானம் நடைபெற்றது. இரவு சபாபதி விநாயகர் உற்சவர் மூஷிக வாகன சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

0 comments

Leave a Reply