ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ரமலான் சிறப்புத் தொழுகை காயல்பட்டினத்தில் நடைபெற்றது

காயல்பட்டினம் கடற்கரையில் ரமலான் பெருநாள் சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.
இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமின் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகம் சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற தொழுகையை அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் வழி நடத்தினார்.
பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார். நிகழ்ச்சியில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயலர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், துணைச் செயலர் எல்.கே.கே.லெப்பைத்தம்பி, துணைத் தலைவர்கள் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எஸ்.இப்னு ஸஊத், பொருளாளர் எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அமானுல்லாஹ், எம்.ஏ.அப்துல் ஜப்பார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலர் முஹ்ஸின் (முர்ஷித்), எம்.ஐ.மெஹர் அலீ, அப்பா பள்ளி தலைவர் எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார், எம்.எச்.அப்துல்வாஹித், எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், எம்.ஏ.எம்.அப்துல் காதிர், எழுத்தாளர்கள் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், சமூக நல்லிணக்க மையத் தலைவர் எம்.ஏ.புகாரீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொழுகையின்போது, ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக ரூ. 2.10 லட்சமும், வெள்ளிக் கொலுசும் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது.
Tags: arumuganeri

0 comments

Leave a Reply