ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» காயல்பட்டினம் » மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தொடக்க விழாImage result for வாவு வஜீஹா மகளிர் கல்லூரி
காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் 11ஆவது மாணவர் பேரவைத் தொடக்க விழா நடைபெற்றது. 
கல்லூரி நிறுவனர் - தலைவர் வாவு எஸ். செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் மாணவி எஸ்.டி. பல்ஹிஸ் புஸ்ரா கிராத் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
கணிதவியல் துறைத் தலைவரும், மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஏ. சுதா  வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜெ. எல்லோரா மாணவியரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மாணவர் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், செயலர் உள்ளிட்டோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரிச் (தன்னாட்சி) செயலர் அருள்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
கல்லூரிச் செயலர் வாவு எம்.எம். மொகுதஸீம், துணைச் செயலர் ஹாபிஸ் வாவு எஸ்.ஏ.ஆர். அஹமது இஸ்ஹாக், இயக்குநர் மெர்சி ஹென்றி ஆகியோர் வாழ்த்தினர். விழாவில், கல்லூரி நிர்வாக உறுப்பினர்களும், உதவிப் பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்துகொண்டனர்.

0 comments

Leave a Reply