ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Image result for திருச்செந்தூரில்  விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  திருச்செந்தூர் தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் முரசு.தமிழப்பன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சி.பா.பாரிவள்ளல், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் கன்னிமுத்து, காயல்பட்டினம் நகரச்செயலர் அம்பேத், ஒன்றிய துணைச்செயலர்கள் மு.தமிழ்பரிதி, மாதவன், டேவிட்ஜாண்வளவன், வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில், குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை இழிவாக பேசியதைக் கண்டித்து கோஷமிட்டனர்.  மாநில மீனவரணிச் செயலர் நியூட்டன் பர்னான்டோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.  திருச்செந்தூர் நகரச் செயலர் பெரு.மகராசன் வரவேற்றார். நகர துணைச் செயலர் அ.உதயா நன்றி கூறினார்.

0 comments

Leave a Reply