ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» தூத்துக்குடி » தூத்துக்குடி மீனவர்களுக்கு உயிர்காப்பு மிதவை பெற அழைப்பு

Image result for உயிர்காப்பு மிதவை


தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்களுக்கு நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படும் உயிர்காப்பு மிதவை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீன்வளத் துறையில் நிலைத்த வாழ்வாதாரத்துக்கான மீன்வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் (ஊஐஙநமக-ஐஐ டழ்ர்த்ங்ஸ்ரீற்)  மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகளுக்கு 100 சதவீத மானியத்தில், ஒவ்வொரு மீன்பிடி கலனுக்கும் தலா இரண்டு உயிர்காப்பு மிதவை வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தில் பயன்பெற மீன்பிடி கலன்களை மீன்வளத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இதற்குரிய விண்ணப்பங்கள், தெற்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர், மீன்பிடி துறைமுக மேலாண்மை, தூத்துக்குடி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments

Leave a Reply