ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» arumuganeri » ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் அளிப்புImage result for ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி நிறுவனர் கமலாவதி ஜெயின் 19ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவசைலம் அவ்வை ஆஸ்ரமம் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவித் தலைவர்கள் (நிர்வாகம்) டாக்டர் எம்.சி. மேகநாதன்,  (பணியகம்) ஆர்.ஜெயக்குமார், (கோர் அல்கலி) சுபாஷ்டாண்டன், பள்ளி டிரஸ்டிகளும்  டி.சி.டபிள்யு, மூத்த பொது மேலாளருமான சி.சந்திரசேகரன், பொது மேலாளர் ஆர்.பசுபதி மற்றும் பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன், ஆகியோர் கமலாவதி ஜெயின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 பள்ளிகளுக்கு இடையேயான கமலாவதி ஜெயின் நினைவு சுழற்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளி, வாழவள்ளான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உமரிக்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி, காயல்பட்டினம் மொகைதீன் மேல்நிலைப் பள்ளி மற்றும் பழையகாயல் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, அணிகள் பங்கேற்றன.
 நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டியில் கமலாவதி மேல்நிலைப் பள்ளி அணியும், உமரிக்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் கமலாவதி மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையை வென்றது. எம்.ஐ.மொகமது முகைதீன் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்றார்.
 திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் ஒளவை ஆஸ்ரமம், காந்தி கிராமம் சாந்தி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவர், மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாந்தி உயர்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாற்றுத் திறன் கொண்ட மாணவர் மாணவிகள் நடனம், ஜிம்னாஸ்டிக், சிலம்பம் உள்ளிட்ட கலைநிகழச்சிகளை நடத்தினர். 
Tags: arumuganeri

0 comments

Leave a Reply