ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» திருச்செந்தூர் » திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Image result for திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
திருச்செந்தூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள காந்திபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மந்திரம் மகள் கலையரசி (30), கூலித் தொழிலாளி. இவர் புதன்கிழமை அங்குள்ள தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் கலையரசியிடம் முகவரி கேட்பது போல் சென்று, அவர் அணிந்திருந்த மூன்றே கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம். இதன்மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும்.   இதுகுறித்து புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 comments

Leave a Reply