ஆறுமுகநேரி இணையத்தளம் அன்புடன் வரவேற்கிறது

You Are Here: Home» சென்னை » பத்திரிகையாளர் மூளைச்சாவு

Image result for பத்திரிகையாளர் மூளைச்சாவு சென்னை
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பத்திரிகையாளரின் 7 உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன.
சென்னையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் மூத்த செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சுதர்சன் (35). இவர் ஜூலை 16-ஆம் தேதி அதிகாலையில், சென்னைக்கு டெம்போ டிராவலரில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நரம்பியல் துறை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் உறுப்புகளைத் தானமளிக்க அவரது உறவினர்கள் முன்வந்ததையடுத்து, சுதர்சனின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இருதய வால்வுகள், தோல் ஆகிய 7 உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
கல்லீரல், ஒரு சிறுநீரகம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. பிற உறுப்புகள், சென்னையில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு தானமளிக்கப்பட்டன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுதர்சனுக்கு தீபா என்ற மனைவியும், 6 வயது மற்றும் 10 மாதத்தில் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்

0 comments

Leave a Reply